Saturday, August 16, 2014

இந்திய சினிமாவுக்கு நூறு வயசு



இந்திய சினிமாவுக்கு நூறு வயசு
அன்பிற்கினிய வாசிப்பாளர்களுக்கு வணக்கம். இணையத்தில் இந்திய சினிமாவுக்கு நூறு வயசு என்ற கட்டுரை வாசித்தேன். அக்கட்டுரையைப் பதிவு செய்தவரின் பெயர் தெரியவில்லை. குறிப்பாக இந்தியாவின் பிரதான மொழிகளில் மிகச் சிறப்பாகப் பேசப்பட்டத் திரைப்படங்களின் பட்டியலைத் தொகுத்துக் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதைக் கருத்தில் கொண்டு என்னுடைய வலைப்பூவில் இக்கட்டுரையைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
சமகாலத்தில் திரைப்படங்கள் மனித மனத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சமூகப் பிரச்சினைகளை முன்வைத்து எடுக்கப்படுகின்ற திரைப்படங்கள் காத்திரமான சிந்தனைகளை மக்களிடம் உருவாக்கிவிடுகிறது. நல்ல சினிமா ஆரோக்கியமான சமூகத்தை உண்டாக்கும் என்பதில் நம்பிக்கையுண்டு. வாசிப்பாளர்களே எப்படியாவது கீழ்க்கண்ட திரைப்படங்களைப் பாருங்கள். அப்படங்களைப் பார்க்கும்படி உங்களது தோழர்களுக்கு ஆலோசனை வழங்குங்கள். பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் திரையிட்டு காண்பியுங்கள். முடிந்தால் விவாதம் செய்யுங்கள். விவாதம் ஒன்றே நல்ல சினிமா உருவாக்கும். நன்றி. வாசித்து விட்டு உங்களது கருத்துக்களைத் தெரிவிக்கவும்.
தமிழ்த் திரைப்படங்கள்
உலகப்படங்களைத் தெரிந்த அளவுக்கு இந்தியப்படங்களை இன்றைய தலைமுறையினர் பார்க்கவில்லை என்கிற வருத்தம் எனக்குண்டு. இந்திய இளம் இயக்குநர்கள் உலகப்படங்களின் தரத்திற்கு நமது படங்கள் வரவேண்டும் என்கிற நோக்கில் 1960 முதல் 1980 வரை பல முயற்சிகளைச் செய்தனர். அவற்றில் சில படங்கள் உலக அளவில் சில பரிசுகளையும் பெற்றன. அவற்றை மொழிவாரியாகத் தொகுத்து உங்களுக்குத் தருவதற்கு முன்பாகவே நிழல் 2008 ஜூலை இதழில் பதிவு செய்தேன். ஒவ்வொரு இயக்குநர்களுக்கு ஒருபடம் வீதம் தொகுக்கப்பட்டது. அதே இயக்குநரின் மற்ற படங்களையும் தேடுவதற்கு இந்த பட்டியல் உதவலாம்.

01.
ஏழை படும் பாடுராம்நாத் [1950]
02.
பராசக்திகிருஷ்ணன்பஞ்சு [1952]
03.
ரத்தக்கண்ணீர்கிருஷ்ணன்பஞ்சு [1954]
04.
அந்தநாள்எஸ்.பாலச்சந்தர் [1954]
05.
மலைக் கள்ளன்ஸ்ரீராமுலு நாயுடு [1954]
06.
சிவகெங்கைச்சீமைகே.சங்கர் [1959]
07.
நெஞ்சில் ஓர் ஆலயம்ஸ்ரீதர் [1962]
08.
உன்னைப்போல் ஒருவன்ஜெயகாந்தன் [1965]
09.
பழனிபீம்சிங் [1965]
10.
மறுபிறவிராமண்ணா [1973]
11.
தாகம்பாபுந்ந்தன் கோடு [1974]
12.
குடிசைஜெயபாரதி [1979]
13.
பசிதுரை [1979]
14.
அவள் அப்படித்தான்ருத்ரைய்யா [1978]
15.
சில நேரங்களில் சில மனிதர்கள்பீம்சிங் [1978]
16.
அக்ரகாரத்தில் கழுதைஜான் ஆப்ரஹாம் [1954]
17. 16
வயதினிலேபாரதிராஜா [1980]
18.
உதிரிப்பூக்கள்மகேந்திரன் [1979]
19.
கண் சிவந்தால் மண் சிவக்கும்ஸ்ரீதர் ராஜன் [1983]
20.
ஏழாவது மனிதன்ஹரிஹரன் [1983]
21.
காணிநிலம்அருண்மொழி [1983]
22.
தண்ணீர் தண்ணீர்கே.பாலச்சந்தர் [1982]
23.
ஒரு இந்தியக்கனவுகோமல் சுவாமிநாதன் [1984]
24.
சந்தியா ராகம்பாலுமகேந்திரா [1990]
25.
அவதாரம்நாசர் [1995]
26.
மோகமுள்ஞானராஜசேகரன் [1995]
27.
கருவேலம்பூக்கள்பூமணி [2000]
28.
குட்டிஜானகி விஸ்வநாதன் [2001]
29.
ஜமீலா [] நதிக்கரையிலேபொன்வண்ணன் [2003]
30.
ஒருத்திஅம்ஷன்குமார் [2003]
31.
ஆட்டோகிராப்சேரன் [2004]
32.
காதல்பாலாஜி சக்திவேல் [2005]
33.
எஸ்.பி.ஜனநாதன் [2006]
34.
பருத்திவீரன்அமீர் [2007]
35.
சுப்ரமணியபுரம்சசிகுமார் [2008]
36.
பூசசி [2008]
37.
ஆரண்ய காண்டம்தியாகராஜன் குமாராராஜா [2011]
38.
வெண்ணிலா கபடிக்குழுசுசீந்திரன் [2009]
39.
பசங்கபாண்டிராஜ் [2009]
40.
அங்காடித்தெருவசந்தபாலன் [2010]
41.
ஆடுகளம்வெற்றிமாறன் [2011]
42.
மௌனகுருசாந்தகுமார் [2011]
43.
மதுபானக்கடைகமலக்கண்ணன் [2012]
44.
அட்டகத்தி.ரஞ்சித் [2012]
45.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்பாலாஜி தரணிதரன் [2012]
கன்னடப் படங்கள்
தமிழ் சினிமா பேசத்தொடங்கியதிலிருந்து இன்று வரை 8000 படங்கள் எடுத்திருக்கலாம். இவை ஒன்று கூட சர்வதேச விருதுகள் (கேன்ஸ், பெர்லின், ரோம் ) பெற்றவை அல்ல. கன்னடப் படங்களில் கமர்சியலாக எடுக்கப்பட்ட படங்கள் பார்க்க சகிக்காது, ஆனால் அவர்கள் இயக்கிய கலைப் படங்கள் 20 தேறும் அவை சர்வதேச அளவில் இருக்கும். சம்ஸ்காரா படம் லோகர்னோ திரைப்பட விழாவில் செப்புச்சிறுத்தை விருதை பெற்றது. பிராமணியத்தின் நோய்க்கூறுகளான சாதி,மத, மூட நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் போல தமிழகத்தில் ஒன்று கூட இல்லை.
நவீன கன்னட சினிமாவை உருவாக்கும் முயற்சியில் நவீன நாடக ஆசிரியர்கள், ஓவியர்கள், நாவலாசிரியர்கள் இணைந்து செய்த முயற்சி அக்காலத்தைப் பொற்காலமாக்கியது. எவ்வித போட்டி பொறாமைகள் இல்லாமல் அவர்களிடமிருந்த கூட்டுறவு மனப்பான்மையைத்தான் இனி வருகிறவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நவீன கன்னட சினிமாவுக்குத் தலித்தியம்,லோகியாவாத சோசலிசம் பெரும் பணி செய்திருக்கிறது. அந்தக்காலகட்டம் உலகம் முழுவதும் இளைஞர்களிடம் ஏற்பட்டிருந்த புரட்சிகரமான உணர்வும், இவர்களது படங்களில் பிரதிபலித்தன. கன்னட தேசிய இன அடையாளங்களும் நவீன நாடக மரபும் நவீன கன்னட சினிமாவை வேறொரு கட்டத்துக்கு நகர்த்தியது. அது ஏன் இங்கே ஏற்படவில்லை என்கிற கேள்விதான் தொக்கி நிற்கிறது. 1970 முதல் 1980 வரை வெளிவந்த தமிழ் படங்களில் நவீன கன்னட சினிமாவின் பாதிப்பை பல இடங்களில் பார்க்கலாம். நிழல் நவீன கன்னட சினிமா நூலை சென்ற ஆண்டு வெளிக்கொண்டு வந்த்து.

சம்ஸ்காராபட்டாபிராமரெட்டி
சோமன துடிபி.வி.காரந்த்
ஹம்ச கீதேஜீ.வி.அய்யர்
கடஷ்ரத்தாகிரிஷ்காசரவள்ளி
கன்னேஷ்வர ராமாஎம்.எஸ்.சத்யூ
காடுகிரிஷ்கர்னாட்
அம்சவிருட்சாகிருஷ்கர்னாட் & பிவி காரந்த்
ஃபனியம்மாபிரேமா காரந்த்
கிரஹானாநாகபரணா
பல்லவி- லங்கேஷ்
கனகாம்பரசிர்சாகர்
சரபஞ்சராபுட்டண்ண கனகல்
கீஜனகூடுடி.எஸ் ரங்கா
ரிஷ்யசிருங்காவி.ஆர்.கே பிரசாத்
காகனக்கொட்டெசி.ஆர். சர்மா
காடிகே ஹோடவாருவேகமல் ஜெகநாத்
ஆக்ஸிடெண்ட்சங்கர் நாக்
அதிதிபி.சேஷாத்ரி
மலையாளப் படங்கள்
மலயாள சினிமாவை தமிழர்கள் தான் தோற்று வைத்தார்கள்; ஆனால் படம் எடுக்கும் முறையிலும் திரை மொழியை புரிந்து கொண்ட முறையிலும் தமிழர்களை விட முன்னே சென்று விட்டனர். மண்வாசனை, யதர்த்த நடிப்பு, முதலியவை மூலம் உலக சினிமாவை நெருங்கிவிட்டனர். மற்ற மாநில மக்களுக்கு ஷகிலா படங்களை எடுத்தாலும் கேரளத்தில் இந்த மாதிரி படங்கள் ஒடுவதில்லை. அவர்களுக்கு கலை படமும் எடுக்க தெரியும், கமர்ஷியல் படமும் எடுக்க தெரியும். மலையாளிகளிடம் கற்று கொள்ள எவ்வளவோ இருக்கின்றன.
மலையாள படங்கள்
1. ஓலவும் தீரவும்பி.என்.மேனன் 1969
2.
நிர்மால்யம்எம்.டி.வாசுதேவன்நாயர் 1973
3.
செம்மீன்ராமுகாரியாத் 1966
4.
இரைகள்கே.ஜி.ஜார்ஜ்
5.
எலிப்பத்தாயம்அடூர்கோபாலகிருஷ்ணன்
6.
சிதம்பரம்அரவிந்தன்
7.
அம்ம அறியான்ஜான் ஆப்ரகாம்
8.
பஞ்சாக்னிஹரிஹரன்
9.
ஆள் கூட்டத்தில் தனியே.வி.சசி
10.
வரவேற்புசத்யன் அந்திக்காடு
11.
சுகிர்தம்- ஹரிகுமார்
12.
ஒரு மின்னா முனுங்கிண்ட நுருங்கு வட்டம்பரதன்
13.
பிறவி- ஷாஜி கருண்
14.
அதிதி- கே.பி.குமாரன்
15.
சதயம்சிபிமலயில்
16.
ஓப்போள்கே.எஸ்.சேதுமாதவன்
17.
வடக்கு நோக்கி எந்திரம்சீனிவாசன்
18.
புருஷார்த்தம்கே.ஆர்.மோகனன்
19.
ஒரு தூவல் பட்சிகள்ரவீந்திரன்
20.
உப்புபவித்திரன்
21.
பெருவழியம்பலம்பத்மராஜன்
22.
பொந்தன்மாடா-டி.வி.சந்திரன்
23.
கபனி நதி சுவன்னப்போல்பி..பக்கர்
24.
விடைபறையுமுன்பேமோகன்
25.
பெருந்தச்சன்அஜயன்
இந்திய சினிமாவுக்கு வயது 100 (அஸ்ஸாமி, மேகாலயா, மணிப்பூர் )
சைக்யா, ஜானுபருவா, கெளதம் போரா போன்ற இயக்குனர்கள் ஈரானிய இயக்குனர்களைவிடச் சிறந்தவர்கள் . இவர்கள் வடகிழக்கு மாநிலங்களில் பிறந்து விட்டதினாலேயே நமது இந்தி பாரம்பரியம் இவர்களை ஒதுக்கி வைத்து விட்டது. இவர்களது படங்களைப் பார்த்தவர்கள் ஒவ்வொரு திரைப்பட விழாக்களிலும் புகழ்ந்ததை கேட்டிருக்கிறேன். ஜானுபருவாவின் படங்களைப் பார்க்க வேண்டாம் சில ப்ரேம்களே கதை சொல்லும்.
வடகிழக்கு மாநில சினிமா
சந்தியராக்டாக்டர் பாபேந்திரநாத் சைக்யா (1977) அசாமி
ஹலோடியா சோராயேபோவோதான் காயே -ஜானுபருவா
வோசோபிபோகெளதம் போரா –(1990)
மீமான்சாசஞ்சீவ் ஹசாரிக்கா (1994)
பிரிஸ்டிகுயுத்தி பருவா
கங்கா சிலாநிர் பாஹிபதும் பருவா
உத்தரான்மனோரஞ்சன் சுர் (1994)
ததாபியோ நதிஹெமந்த தாஸ்
ருத்ரபாட்மிருதுல் குப்தா
ஷா நெளஅரிபாம் ஷ்யாம் சர்மா, மணிப்பூரி
ஆலாயாரோன்ஜங்க்டாவோ போடோஷா, போடோ மொழி
இமாஹி நிங்தெம்மணிப்பூரி
மாணிக் ரெய்தாங்அர்தேந்து பட்டாச்சார்யா, மேகாலயா
நவீன இந்திய சினிமா (வங்காளம்)
இந்திய மறுமலர்ச்சியில் வங்கத்திற்கு எப்போதுமே முதலிடம் உண்டு. சினிமா,(சத்யஜித்ரே) நாடகம் (உத்பெல்தத்) ஓவியம் (ஜெமினிராய்) இசை (ரவிசங்கர்)இலக்கியம்- கவிதை(ரவீந்திரநாத் தாகூர்) நாவல் (பக்கிங் சந்திரசட்டர்ஜி, சரத்சந்திரர்) சினிமா இயக்கம் (சித்தானந்த தாஸ் குப்தா) இது போல எந்த ஒரு துறையை எடுத்துக்கொண்டாலும் வங்காலிகள் முன்னோடும் பிள்ளைகளாக இருந்திருக்கிறார்கள். சினிமாவில் அவர்களுடைய சாதனை என்பது உலகசினிமாவிற்கு பல்வேறுவிதங்களில் நெருங்கிபோய் இருக்கிறது. இந்திய நவீன சினிமாவிற்கு அவர்களுடைய நன்கொடை பெரியதாகத் தான் இருந்திருக்கிறது.
வங்காளப் படங்கள்
பதேர்பாஞ்சாலிசத்யஜித்ரே
கல்கத்தா 71 – மிருனாள் சென்
மேஹ தக தாராரித்விக் குமார் கட்டாக்
சோக்உத்பலேந்து சக்ரவர்த்தி
36
செளரங்கி லேன்அபர்ணா சென்
காபூலிவாலாதாபன் சின்ஹா
அந்திகாலிபுத்த தாஸ் தேவ குப்தா
தஹால்கெளதம் கோஷ்
உனிசே ஏப்ரல்ரிதுபர்ண கோஷ்
சாரா ஆகாஷ்பாசு சட்டர்ஜி
சின்னமுள்நிமாய் கோஷ்
தாதா தாகூர்சுதிர் முகர்ஜி
சாகர் சங்கமேதேவகி குமார் போஸ்
அனுராதாரிஷிகேஷ் முகர்ஜி
பஹானி நிவேதிதாபிஜய்பாசு
ஹேமந்தர் பாஹிஉர்மி சக்ரவர்த்தி
சோத்பிப்ளப் ராய் செளத்ரி
தாதர் கிர்திதருண் மஜீம்தர்
கோனிசரோஜ் டே
செளதாநப்யெந்து சட்டர்ஜி
கால் அபிரிதிஅபிதாப் சக்ரவர்த்தி
ஏக்தி நதிர்நாம்அனுப்சிங்
மகுல்பாதிர் செராங்சேகர்தாஸ்
இந்திய சினிமாவுக்கு நூறூ வயசுவடமேற்கு மாநிலப்படங்கள் (மராத்தி, குஜராத்தி)
குஜராத்தி, மராத்தியில் மிகச்சிறந்த படங்கள் நவீன நாடகக்குழுக்களாலேயே உருவானது. விஜய் டெண்டுல்கர், கேத்தன் மேத்தா, ஜாபர் பட்டேல், கோவிந்த் நிக்லானி, போன்றோரின் பங்களிப்பை பிற மொழியினரும் பயன்படுத்திக்கொண்டனர்.
பிஞ்ராமராட்டி 1951
சாம்னாஜாபர் படேல் , மராட்டி 1975
உம்பரத்தாஜாபர்படேல் 1981
கன்ஷிராம் கொத்வால்யுக்த் குழு 1976
சாந்ததா, கோர்ட் சாலு ஆஹேகோவிந்த் நிஹ்லானி
ஷ்யாமாச்சி ஆயிமராட்டி 1974
ஜெய்த்ரே ஜெய்த்தேவகி நந்தன் 1977
கோபாலாராஜ்தத் 1979
சர்வ சக்ஷிராம்தாஸ் புட்டனே 1979
22
ஜீன் 1892 – நாச்சி ஜெகத் மற்றும் பட்டவர்த்தன் 1980
அக்ரிமேத்அமோல் பாலேகர் 1982
ஸ்மிரிதி சித்தேவிஜய் மேத்தா 1984
ஆயிமகேஷ் மஞ்ச்ரேக்கர் 1995
பங்கர்வாடிஅமோல் பாலேகர் 1997
பிந்தாஸத்சந்திரகாந்குல்கர்னி
டோம்பிலி பாஸ்ட்ரிஷிகாந்த் காமத் 2005
டிங்னியாமகேஷ் ஹடாவலே 2008
கங்குகுஜராத்தி 1969
ஜனம் தீப்குஜராத்தி
பவானிபவாய்கேத்தன் மேத்தா 1980

…………………………………………………

No comments:

Post a Comment